வார இறுதியை இந்த படங்களோடு என்ஜாய் பண்ணுங்க.. இந்த வார ஓடிடி ரிலீஸ்

வார இறுதி வந்தாலே எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். அதிலும் தியேட்டருக்கு போகாமல் வீட்டிலேயே படம் பார்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதுப்புது ட்ரீட் கிடைக்கிறது.

அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது என்பதை பார்ப்போம். அதில் பசுபதி, விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ் இன்று சோனி லைவ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

அடுத்ததாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று நேரடியாக வெளியாகி உள்ள படம் தான் ஸ்டீபன். சைக்கோ திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

இதை அடுத்து ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்தால் தி கேர்ள் ஃபிரண்ட் படமும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஆஹா தமிழ் தளத்தில் அஸ்வின் நடிப்பில் உருவாகி இருக்கும் தூள்பேட் போலீஸ் ஸ்டேஷன் வெப் சீரிஸ் மாலை ஏழு மணிக்கு வெளியாகிறது.

மேலும் மலையாளத்தில் வெளிவந்து பல கோடிகளை வசூல் செய்த Dies Irae இன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. ஹாரர் திரில்லர் பிரியர்களுக்கு இப்படம் ஒரு நல்ல ட்ரீட்.

இதை அடுத்து ஸ்மிருதி வெங்கட், மைக்கேல் தங்கதுரை ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கோமதி சங்கர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படியாக இந்த வார இறுதி போர் அடிக்காமல் இருக்கும் வகையில் மேற்கண்ட படங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க வந்துள்ளது.