ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளங்களில் புதுப்புது படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் இன்வெஸ்டிகேஷன், திரில்லர் என பல வித்தியாசமான படங்களும் வெப் தொடர்களும் வெளிவந்தது.
அதைத்தொடர்ந்து இந்த வாரமும் பல படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது. அதில் நாளை வெள்ளிக்கிழமை அன்று துல்கர் சல்மான், சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த பீரியட் படமான காந்தா நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
அதே தளத்தில் single papa, Man vs Baby ஆகிய சீரிஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதைத்தொடர்ந்து தெலுங்கில் உருவான காமெடி சீரிஸ் த்ரீ ரோசஸ் ஆகா தமிழ் தளத்தில் நாளை வெளியாகிறது.
மேலும் கிஷன் தாஸ் நடிப்பில் வெளிவந்த ஆரோமலே ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை வெளியாகிறது. அதேபோல் பெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் மேன் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன் ஜூலை மாதம் உலகமெங்கும் வெளியானது.
அப்படம் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படியாக பல படங்கள் டிஜிட்டலுக்கு வருகிறது. ஆனால் நாளை சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் என்பதால் அவருடைய நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற படையப்பா ரீ ரிலீஸ் ஆகிறது.
அந்த படத்தை தியேட்டரில் மீண்டும் தெறிக்க விட ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படியாக நாளை ரசிகர்களுக்கு பிடித்த படங்கள் தியேட்டர், ஓடிடி என வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.