நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்.. 2 பேரை கொத்தாக தூக்கி வெளியே போட்ட பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 9 சீசன் மக்களிடையே சரியாக சென்றடையவில்லை. அதற்கு மாறாக எதிர்மறை விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.

அதிலும் சில பிரபலங்கள் இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா என வெளிப்படையாக டேமேஜ் செய்யும் அளவுக்கு தான் ஷோ நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களின் நடவடிக்கைகள் தான்.

அதிலும் பாரு, கமருதீன் இருவரின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால் விஜய் சேதுபதி உட்பட பிக்பாஸ் குழுவினர் அனைவரும் டென்ஷனில் தான் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் இவர்களை வைத்து சமாளிப்பது பெரும் அக்கப்போராக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது.

அதாவது இந்த வாரம் இரண்டு பேர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப் போகிறார்கள். அது யாராக இருக்கும் என்ற ஆவல் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் நாம் எதிர்பார்த்த போட்டியாளர்கள் வெளியேறவில்லை.

அதன்படி சான்ட்ரா, வியானா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் பிரஜன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வாரம் அவருடைய மனைவியும் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.