திடீரென்று மாறிய ஓட்டிங் லிஸ்ட்.. பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுபவர் இவரா?

Bigg Boss 7 Voting List: பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி மூன்று வாரத்தை எட்டி இருக்கும் நிலையில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்பது குறித்த ஓட்டிங் லிஸ்ட் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வாரம் நாமினேஷனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் சிக்கி உள்ளனர் இதில் பிரதீப் அதிகமாக வாக்குகளை பெற்று முதல் போட்டியாளராக தப்பித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து நிக்சன், ஐஷூ, மணி சந்திரா, விசித்ரா, விக்ரம் ஆகியோர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ஓட்டிங் லிஸ்டில் குறைவான வாக்குகளை பெற்று கடைசி இடங்களில் வினுஷா, விஜய் வர்மா, அக்ஷயா, பூர்ணிமா ஆகியோர்கள் 0.01% வித்தியாசத்தில் அடுத்தடுத்த இடத்தினை பிடித்துள்ளனர் இவர்களில் விக்ரம் தான் முதலில் குறைவான வாக்குகளை பெற்றிருந்தார்.

எனவே விக்ரம் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓட்டிங் மாறி தப்பித்துள்ளார். அதாவது இந்த வாரம் தொடர்ந்து வன்மத்துடன் விளையாடி வரும் மாயா பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை சுத்தமாக மதிக்காமல் வேண்டுமென்றே அவர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Bigg Boss 7 Voting List:
Bigg Boss 7 Voting List:

அப்படி நாளுக்கு நாள் இவருடைய ரகளை அதிகரித்துக் கொண்டே போவதனால் பிக் பாஸ் வீட்டிலில் இவர் இல்லை என்றால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் வினுஷா தேவி தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என அழுது கொண்டிருந்தார். இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மாயா ஆறுதல் கூறிவிட்டு பிறகு இந்த வாரம் வினுஷாதான் வெளியேறப் போகிறார் என கிண்டல் செய்து வருகிறார்.

Bigg Boss 7 Voting List:
Bigg Boss 7 Voting List:

அதோடு மட்டுமல்லாமல் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் வினிஷாவுடன் நன்றாக பழகி வரும் மாயா ஆக்சிஜன் பாடிலை கைப்பற்றும் விளையாட்டில் வினுஷாவை சேர்த்துக் கொள்ளவில்லை எனவே இதனால் தற்பொழுது மாயாவுக்கு ஓட்டிங் மிகவும் குறைத்துள்ளது.