Singer Madhu Soundar: தொடர்ந்து ஏதாவது ஒரு சில பாடல்கள் திடீரென சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். அப்படி கடந்த சில காலங்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்திய பாடல் தான் உருளைக்கிழங்கு செல்ல குட்டி என்ற பாடல்.
இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி சோசியல் மீடியாவில் படும் வைரலாக இருந்து வருகிறது. இவ்வாறு இந்த பாடலை பாடியவர் யார் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது அனைவருக்கும் தெரிய வர ஆச்சரியமடைந்து வருகின்றனர்.
அதாவது பாடகி மது தன் குரலில் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடலை பாடியுள்ளார். இவ்வாறு மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருவது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். பொதுவாக, ரைம்ஸ் பாடும்பொழுது உங்களின் குரலை பெரிய அளவில் மாற்ற வேண்டியது இருக்கும் நாம் சிரமப்பட்டு பாடிய பாடல் இது.
ஆனால் நாம் பட்ட சிரமத்திற்கு கடவுள் என்றாவது ஒருநாள் மிகப்பெரிய பலனை தருவார். அதுபோல நமக்கு இந்த பாடல் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் இந்த பாடலை பாடியது சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னும் தெரியவந்துள்ளது. மது சௌந்தர் இதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மாபெரும் புகழை அடைந்த பாடகர் சக்தி அமரன் தான் இவருடைய கணவர்.
இவர்கள் இருவரும் கடந்து சில நாட்களாக லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக இருந்து வந்தனர். மேலும் பல பேட்டிகளிலும் இதனை பற்றி கூறியுள்ளார்கள். இவ்வாறு சக்தி அமரனும் மது சௌந்தரும் இணைந்து திரைப்படங்களில் பாடிவரும் நிலையில் சிறந்த பாடகர்கள் என்பதையும் நிரூபித்து காட்டியுள்ளனர்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.