நடிகர் விஜய் பாடிய இந்த பாட்டு தான் எனக்கு மிகவும் பிடிக்கும் வெளிப்படையாக கூறிய நடிகை ஹீமோ குரோஷி.!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான ஒரு சில திரைப்படங்கள் திரையரங்குகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது என்று தான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாகக் கூற வேண்டுமென்றால் ரசிகர்கள் மிக ஆவலுடன் இவர் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை எதிர்பார்த்து வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களாகவே உருவாகி வந்த வலிமை திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் முடிவடைந்து வெளியீட்டிற்காக தயாராகி வந்தது வலிமை திரைப்படம் விரைவில் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை படக்குழு தந்து கொண்டே போனார்கள்.

முதலில் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றினார்கள் தற்போது இறுதியாக பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப் போகிறோம் என வலிமை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.காலா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஹீமோ குரோஷி.

அஜித்திற்கு ஜோடியாக வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார் வலிமை திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நிலைமையில் இவரும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

படம் வெளிவர இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் நடிகை ஹீமோ குரோஷி புரமோஷனுக்காக சின்ன சின்ன பேட்டி அளித்து வருகிறார் அப்படி ஒரு பேட்டியில் இவருக்கு மிகவும் பிடித்த பாடல் என்ன என கேட்டபோது அதற்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடல் தான் என தெரிவித்ததுமட்டுமல்லாமல் அந்த பாடலை அவரே பாடி காட்டினாராம்.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் குட்டி ஸ்டோரி பாடல் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment