வலிமை படத்தில் இந்த சீன் தான் ஹைலைட்.. வைரலாகும் புதிய புகைப்படம்.

சினிமாவிற்கு ஏற்றமாதிரி இப்பொழுது இருக்கும் இயக்குனர்கள் புதிய பரிமாணத்துடன் வலம் வருகின்றனர்.  அதனாலேயே அடுத்தடுத்த தொடர் வெற்றிகளைக் கொடுத்து வெகு விரைவிலேயே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெறுவதோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகரின் படங்களை இயக்கவும் செய்கின்றனர்.

அந்த வகையில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை கூறிய காலத்திலேயே பெற்ற ஹச்.வினோத் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களைத் தொடர்ந்து  அஜித்தை வைத்து வலிமை  திரைப்படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

ஷூட்டிங்கில் இருந்த எந்த ஒரு புகைப்படத்தையும் ரசிகர்கள் கேட்டதற்கு படக்குழுவினர் வெளியிடாமல் மறைமுகமாக வைத்தாலும் அஜித்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் எப்படியாவது சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை மறைமுகமாக எடுத்து இணைய தள பக்கங்களில் வெளியீட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வலிமை படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பைக் ரேஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதில் அஜித் பைக் பைக்கில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணைய தளத்தை ஆட்டிப்படைக்கின்றன. இதோ நீங்களே பாருங்கள்.

ajith

Leave a Comment

Exit mobile version