பா. ரஞ்சித்தின் அடுத்த பட தலைப்பு இதுவா.? வித்தியாசமா இருக்கே.. கதை இப்படித் தான் இருக்குமோ.?

“அட்டகத்தி” என்ற திரைப்படத்தை முதலில் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் பா. ரஞ்சித். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை எடுத்தார் அந்த வகையில் மெட்ராஸ், கபாலி, காலா  ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.

அதன் காரணமாக பா. ரஞ்சித் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார். அண்மையில் அர்யாவை சார்பட்டா பரம்பரை என்ற படத்தை எடுத்து இருந்தார். இந்த 80 காலகட்டங்களில் நடத்த குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான கதை இந்த கதை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பராக எடுத்திருந்தார் இயக்குனர் பா. ரஞ்சித்.

இந்த படம் விறுவிறுப்புக்கு பஞ்சம்மில்லாமல் அதே சமயம் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவிற்கு படம் அமைந்தால் மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடினர்.  இந்த படத்திற்காக நடிகை, நடிகர்களும் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து இருந்தனர். சார்பட்டா பரம்பரை படம் OTT தளத்தில் பார்க்க முடிந்தது.  எது எப்படியோ படம் அனைவருது மத்தியிலும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து இப்பொழுது கூட மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர்களை வைத்து நட்சத்திரம் நகருகிறது என்னும் படத்தை எடுத்து வருகிறார்.இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என தெரிகிறது.

இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக மீண்டும் ஒரு வித்தியாசமான படத்தை கொடுக்க இருக்கிறார் அந்த படத்திற்கான தலைப்பு கூட தற்போது வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த பட தலைப்பு “மைதானம்” இந்த படம் முழுக்க முழுக்க BODY BULIDING- கை மையமாக வைத்து கதை நகரும் என தெரியவருகிறது.

Leave a Comment