இந்தப் பொங்கல் “துணிவு பொங்கல் தான்”.. இயக்குனர் பொன்ராம் கொடுத்த விமர்சனம்.!

0
ajith-
ajith-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் அண்மை காலமாக சமூக அக்கறை உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைக்கோர்த்து நடித்த திரைப்படம் துணிவு.

இந்த திரைப்படம் வங்கியில் நடக்கும் பித்தலாட்டங்களை வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார் அதே சமயம் இந்த படத்தில் அஜித்திற்கு தேவையான மாஸ் சீன்களும் இடம்பெற்று இருந்ததால் படம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்போது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதுவரை உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது தமிழகத்தில் இதுவரை மட்டும் 75 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வருகின்ற நாட்களில் அஜித்தின் துணிவு திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளிக் குவிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை..

இது இப்படி இருக்க ரசிகர்கள், மக்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் தொடர்ந்து துணிவு படத்தை பார்த்து நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் இயக்குனர் பொன்ராம்.. அண்மையில் துணிவு திரைப்படத்தை பார்த்து விட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு திரைப்படம் குறித்து சில பதிவுகளை போட்டு உள்ளார் அதில் அவர் சொன்னது..

அஜித்தின் நடிப்பு சூப்பர்.. ஹச் வினோத் அவர்களின் கான்செப்ட் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது. மொத்தத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணிவு திரைப்படம் வெளியாகி உள்ளது என தெரிவித்துள்ளார். இதோ நீங்களே பாருங்கள் இயக்குனர் பொன்ராம் போட்ட அந்த twitter பதிவு..