“ஐயா” படத்தில் நயன்தாராவை செலக்ட் பண்ண.. இந்த ஒரு விஷயம் தான் காரணம் – ரகசியத்தை உடைத்த இயக்குனர் ஹரி.!

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் தொடர்ந்து கமர்சியல் ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து அசதி வருகிறார் இவர் இதுவரை பல ஆக்சன் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக இருந்து வந்துள்ளதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அண்மையில் இயக்குனர் ஹரி  அருண் விஜயுடன் கூட்டணி அமைத்து யானை திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை இந்த திரைப்படம் 9 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளி அசத்தும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ஹரி தன்னுடைய திரைப்பட பயணம் மற்றும் அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டார் அதில் ஒன்றாக நயன்தாரா பற்றி அவர் பேசினார்.

ஹரி இயக்கத்தில் உருவான ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த தமிழ் சினிமா உலகில் என்ட்ரி ஆனார். ஹரி அவர் பற்றி கூறுகையில் நான் ஐயா திரைப்பட கதையை எழுதி முடித்தவுடன் கதைப்படி அந்த பெண்ணிற்கு 17 வயது நிரம்பி இருக்க வேண்டும் அதனை மக்களிடம் சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆதலால் புதுமுக நடிகை மட்டுமே வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அப்படியான கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தேன் அந்த சமயத்தில் நயன்தாரா நடித்த இரண்டு படங்களின் சிடியை கொடுத்தார்கள் நான் போட்டு பார்த்தேன் அதில் இவர் சூப்பராக நடித்திருந்தார் மேலும் அப்போது அவருடைய வயது ரொம்ப கம்மி.

அப்பொழுதே நான் முடிவு பண்ணி விட்டேன் நயன்தாரா தான் இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் அட்வான்ஸ் செக் வாங்கிக்கொண்டு தான் நயன்தாராவை சந்திக்க சென்றேன் கதை கூறியதும் நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டார் என கூறினார் ஹரி.

 

Leave a Comment