கமலின் பிறந்தநாளுக்காக லோகேஷ் கனகராஜ் செய்ய போவதை பாருங்க !! வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.! வைரலாகும் ட்வீட்.

kamalahasan 232 movie update : உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் பிக்பாசை தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் நவம்பர் ஏழாம் தேதி மாலை 5 மணிக்கு ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி தரயிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அது என்ன இனிப்பான செய்தி என்றால் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன்2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்..

இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக உலகநாயகன் கமலை வைத்து ஒரு புதிய திரைப்படம் எடுக்க போகிறார் என்று லோகேஷ் கனகராஜ் இணையதளத்தில் அறிவித்துள்ளார்.

இந்த புதிய படமானது 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் கூறியிருந்தார். இந்த திரைப்படம் கமல்ஹாசனுக்கு 232வது  படமாக அமைகிறது. இந்த அறிவிப்பில் எவன் என்று நினைத்தாய் படத்தின் தலைப்பு மாறப்போகிறது என்று கூறியிருந்தார்.

கமலின் தீவிர ரசிகர்களுக்கு வரும் நவம்பர் ஏழாம் தேதி மாலை 5 மணிக்கு அவர் நடிக்கஇருக்கும் 232 வது படத்தின்டைட்டில் டீசர் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த செய்திகள் எப்போது வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்து கொண்டு வருகிறார்கள்.

kamalhaasan232-m

Leave a Comment

Exit mobile version