தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை சமீப காலமாக கொடுத்து அசத்தி வருகிறார் தல அஜித். முன்பெல்லாம் காதல் ஆக்சன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக சென்டிமென்ட், சமூக அக்கறை உள்ள படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
ஹச். வினோத் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வலிமை என்ற வித்தியாசமான படத்தில் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் சீன்கள் ஆக இருந்தாலும் இதுவரை இல்லாத அளவிற்கு ஆன ஒரு புதிய ஆக்சன் படமாக இது இருக்கும் என தெரியவருகிறது இதனால் அஜீத் ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்திருந்தாலும் இந்தப் படத்தின் அப்டேட் வெளிவந்து ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போடுகின்றனர் அந்த அளவிற்கு இந்த படத்தின் பாடல் மற்றும் glimpse வீடியோ ரசிகர்களை கவர்ந்த நிலையில் வலிமை படத்திலிருந்து அவ்வப்போது எக்ஸ்க்ளூசிவ் போட்டோக்கள் வெளிவருகின்றன. அவ்வகையில் தற்போது 8 பைக்குகள் தலைகீழாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
இதை பார்த்த ரசிகர்களில் திரையரங்கில் பார்த்தால் மாஸாக இருக்கும் என கூறிவருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் அந்த காட்சியில் தல அஜித் நடித்துஉள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் டிரைலர் அல்லது டீசரில் வந்தாள் கூட சிறப்பாக இருக்கும் எனக் கூறி தற்போது அப்டேட் கேட்க தொடங்கி உள்ளனர் ரசிகர்கள்.

வலிமை படத்திலிருந்து தற்போது வெளிவருகின்ற ஒவ்வொரு தகவலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாதிரியே இருப்பதால் நிச்சயம் நாம் எதிர்பார்ப்பதை விட பல மடங்கு சிறப்பாக இருக்கும் என தெரியவருகிறது மேலும் அஜித் கேரியரில் இது ஒரு மெகா ஹிட் படமாக அமையும் என பலரும் கூறி வருகின்றனர்.