தமிழ் சினிமா உலகில் நயன்தாராவை போன்ற பல டாப் நடிகைகள் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரையிலும் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன.
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டடித்தது இப்படி தமிழ் சினிமாவில் வெற்றியை கொடுத்துக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் திடீரென சோலோ படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றியை அள்ளி வருகிறார்.
அண்மையில் கூட நடிகர் மகேஷ் பாபுவுடன் கைகோர்த்து சர்க்காரு வாரி பட்டா என்ற படத்தில் நடித்து அசத்தினார் இந்த படம் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது தமிழில் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் சாணி காயிதம் படத்தில் நடித்தார். இந்தப் படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா நேரம்போக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம் அந்த வகையில் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அவர் அணிந்திருந்த அந்த டிரஸ்ஸின் விலை மட்டும் எவ்வளவு என்பது குறித்து தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அந்த மாடர்ன் ட்ரெஸ்ஸின் விலை மட்டுமே சுமார் 6 லட்சம் என கூறப்படுகிறது.
