தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து ஓடி கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான் அந்த வகையில் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் அவருடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படமாக உருவாக்கி வருவதால் இந்த படத்தில் ஆக்சன், செண்டிமெண்ட் சீன்கள் அதிகம் இருக்கும் என தெரிய வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் படக்குழு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படத்திலிருந்து டீசர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி லைகா நிறுவனத்துடன் இரண்டு திரைப்படங்களின் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார் இந்த சமயத்தில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி பல ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த வகையில் ரஜினி ஒரு குழந்தை சில வருடங்களுக்கு முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த குழந்தை தற்போது வளர்ந்து மிகப்பெரிய ஒரு சீரியல் நடிகராக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அந்த நடிகர் வேறு யாரும் அல்ல..
பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த ராஜ் கமல் தான்.. அவர் சிறுவயதில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்..
