முதல்வன் திரைப்படத்தில் இதனால் தான் எந்த ஒரு முன்னணி நடிகர்களும் நடிக்க வைக்கவில்லை.! இயக்குனர் ஒரே போடு

இயக்குனர் சங்கர் தற்போது நடிகர் கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் அது மட்டுமல்லாமல் தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சங்கரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து தற்போது இயக்குனராக வலம் வரும் காந்தி கிருஷ்ணன் அவர்கள் தற்போது ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

காந்தி கிருஷ்ணன் முதலில் அரவிந்த் சாமியை வைத்து சுஜாதா திரைக்கதையில் இன்ஜினியர் என்கிற படத்தை இயக்கியிருந்தார் ஆனால் இந்த படம் பாதியில் கைவிடப்பட்ட நிலையில் அடுத்ததாக விஷாலை வைத்து செல்லமே என்ற படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து கரிகாலன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஒரு சில காரணங்களால் பாதையில் கைவிடப்பட்ட நிலையில் திரும்பவும் காந்தி கிருஷ்ணாவை மேற்கொண்டு இயக்க சொன்னார்கள் ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இந்த படம் பாகுபலி போன்று கதை என்றும் அதற்கு முன்பாகவே எழுதப்பட்டது என்றும் காந்தி  கிருஷ்ணன் கூறியுள்ளார்.

எந்திரன் திரைப்படத்தில் முதலில் கமல் அவர்கள் தான் நடிக்க இருந்தது ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகுதான் படத்தின் கதையை ரஜினிகாந்திடம் கூறினார்கள் அதன் பிறகு தான் ரஜினி அவர்கள் எந்திரன் திரைப்படத்தில் நடித்தார் அதே போல் இந்தியன் திரைப்படத்தில் முதலில் ரஜினி அவர்களிடம் ஒன்லைன்ல வரிகளில் கதையை கூறி இருந்தார் சங்கர் ஆனால் இந்த படம் எனக்கு வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்து விட்டார் ரஜினி அதன் பிறகு கமலஹாசன் இந்த திரைப்படத்தில் நடித்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதேபோல் முதல்வன் திரைப்படத்தில் நடிகர் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரும் தான் முதலில் நடிக்க இருந்ததாம். ஆனால் இந்த படத்தில்  முதல்வர் என்ற வார்த்தை அடிபட்டதால் அதில் அவர்கள் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை ஏனென்றால் ஆட்சியில் இருக்கும் ஒரு முதல்வரை இழிவுபடுத்துவிதமாக இந்த படம் அமையும் என என்னி இந்த படத்திற்கு மறுப்பு தெரிவித்தார்கள் என்று கூறியுள்ளார் காந்தி கிருஷ்ணன்.

Leave a Comment