இதனால்தான் சச்சின்யுடன், விராட் கோலியை ஒப்பிட முடியாது.! உண்மையை சொன்ன வாசிம் அக்ரம்.!

0

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் அவர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி பற்றிய ஒப்பீட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகை பொறுத்த வரை சச்சின் டெண்டுல்கர் ஒரு கடவுள் அவரது ரசிகர்கள் அவரை அப்படித்தான் கொண்டாடுகிறார்கள் இந்தியாவைத் தாண்டியும் உலகம் முழுவதிலும் எங்கே கிரிக்கெட் இருக்கிறதோ அங்கெல்லாம் சச்சினின் பெயர் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த அளவிற்கு தனது திறமையை வெளிக்காட்டி சாதனை படைத்துள்ளார் என்பது நாம் அறிந்ததே இதனாலேயே கிரிக்கெட் வீரர்கள் அவரை ஜாம்பவான் என்று போற்றி வருகிறார்கள்.

கிரிக்கெட் உலகை பொறுத்தவரை ஒருவர் திறமையாக விளையாடினால் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதை வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் சச்சின் டெண்டுல்கருடன் மற்ற வீரர்களுடன் பலர் ஒப்பிட்டு பேசி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அவர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட்  இவர்கள் இருவரை பற்றி ஒப்பிட்டு சில விஷயங்களை கூறியுள்ளார்.

சச்சினுடன் ஒப்பிடும்போது விராட் கோலி மாடன் ஆனவர் இருவரும் வெவ்வேறு விதமான வீரர்கள். கோலி ஒரு நபராக, ஒரு பேட்ஸ்மேனாக அவர் மிகவும் ஆக்ரோஷமானவர். மற்றும் நேர்மையானவர். சச்சின் அமைதியாகவும் இன்னும் ஆக்ரோஷமாகவும் இருப்பார். மேலும் வித்தியாசமான உடல்மொழி உடையவர்கள் எனவே ஒரு பந்துவீச்சாளர் நாங்கள் அவரை அதிகம் புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

sachin
sachin

தொடர்ந்து பேசிய அவர் நான் அவரை முயற்சித்து சறுக்கல் விட்டால் அவர் இன்னும் உறுதியாக இருப்பார் இதை சச்சினும்அறிவார் இது எனது புரிதல் நான் தவறாக கூட சொல்லலாம் ஒருவேளை நான் கோலியை சறுக்கி விட்டால் அவர் ஆக்ரோஷப்பட்டு தனது மனநிலையை இழப்பார் எனவே ஒரு பேட்ஸ்மேன் கோபப்படும் பொழுது அவர் உங்களை தாக்குவார் அப்பொழுது அவரை வெளியேற்றுவதற்கான அதிக வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.