இப்ப தான் காதல் மலர்ந்தது.! அதுக்குள்ள கல்யாணத்துக்கு ரெடியான நடிகை ரகுல் ப்ரீத் சிங்.! எப்ப கல்யாணம் தெரியுமா.?

0

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் அனைத்து மொழிகளிலும் கிடைக்கத் தொடங்கின அதன் விளைவாக தற்போது தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக ரகுல் ப்ரீத் சிங் மாறி உள்ளார்.

மேலும் தமிழில் இந்தியன் 2, அயலான் போன்ற படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த ரகுல் பிரீத் சிங் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது சினிமா துறையில் வெற்றி கண்டு வந்த இவருக்கு தற்போது திருமண ஆசை வந்துவிட்டது.

என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது அது நடக்க இருக்கிறது நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்தியில் பிரபல பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானியை காதலித்து வந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் பிறந்தநாளன்று இருவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலிப்பதாக கூறிய புகைப்படத்தை வெளியிட்டார்.

செய்தி இணையதளத்தில் தீயாய் பரவி வந்த நிலையில் விரைவிலேயே திருமணம் செய்ய போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இப்பதான் காதலிக்கிற செய்தியை கொடுத்தீங்க அதுக்குள்ளே கிளம்பி விட்டீர்களா என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர். இதனால் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்வசம் இருக்கின்ற அனைத்து படங்களிலும் நடித்து முடிக்க ரெடியாக இருக்கிறாராம்.  இச்செய்தி தான் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.