யுவனின் மேஜிக்கல் என்றால் அது இதுதான்.! வீடியோவை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்த வெங்கட் பிரபு…

yuvan-shankar-raja
yuvan-shankar-raja

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஒருவர். இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு தன்னுடைய இசையின் மூலம் பல ரசிகர்களை கட்டி வைத்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக இவருடைய பாடலுக்காகவே பல ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருப்பார்கள் அந்த வகையில் இவர் பாடிய மெலோடி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான ஒரு படத்தின் பாடல்களை பேருந்தில் கல்லூரி மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் வெங்கட் பிரபு யுவன் காம்போவில் பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மங்காத்தா போன்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் அதேபோல வெங்கட் பிரபு மற்றும் யுவன் கூட்டணியில் வெளியான திரைப்படமான சரோஜா படத்தில் இடம் பெற்று இருந்த கோடான கோடி என்ற பாடலுக்கு கல்லூரி மாணவர்கள் நடனமாடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள் இதை பார்த்த வெங்கட் பிரபு அதை தன்னுடைய இணையதள பக்கத்தில் பகிர்ந்து யுவனின் மேஜிக்கல் என்றால் அது இதுதான் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே போல பல ரசிகர்கள் யுவனின் பாடலை வைப் பன்னி வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இது என்று கூறிய வருகிறார்கள் அதிலும் குறிப்பாக ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து  ரசித்து வருகிறார்கள்.

மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தபோது இதை குறிப்பிட்டு ஒரு ரசிகர் வெங்கட் பிரபுவிடம் கேள்வி எழுப்பியிருந்தார் இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு இது கண்டிப்பா யுவனின் மேஜிக் மற்றும் நடன இயக்குனர் கல்யாண் நடன அமைப்பால் மட்டுமே இந்த பாடல் வெற்றியாவது என்ஜாய் பாய்ஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதோ அந்த வீடியோ…