இலங்கை தொடரின் போது ராகுல் டிராவிட் என்னை முதலில் சந்தித்த உடன் அவர் கேட்ட விஷயம் இதுதான்.? இப்படி கேட்பார் என்று நானே எதிர்பார்க்கவில்லை – தீபக் சஹர் பேட்டி.

காலகட்டத்தில் இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் பலருக்கு இருந்தாலும் விக்கெட்டை விடாமல் எடுத்துச் செல்லும் பொறுப்பை சுமந்து இருந்து வருகின்ற மோடி ராகுல் டிராவிட் தான் அந்த அளவிற்கு பந்தை சரியாக கணித்து விளையாடுவதால் அவருக்கு தடுப்புச்சுவர் என்ற பெயரும் கிடைத்தது.

தற்போது இந்திய கிரிக்கெட்டில் இவர் பயிற்சியாளராக இருந்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் வீரர்களான U19 அணி வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்து தற்போது படிப்படியாக முன்னேறி இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார் அந்த வகையில்  இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் தற்காலிக பயிற்சியாளராக இருந்தார்.

இந்தியா மற்றும் இலங்கை உடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடந்தன இதில் இரு அணிகளும் ஒவ்வொரு தொடரை கைப்பற்றி அசத்தியது இந்த போட்டிகளில் தீபக் சஹர் சிறப்பாக விளையாண்டு அசத்தினார் தற்போது தீபக் சஹர்  சென்னை அணிக்காக  IPL -ல் விளையாடு இருக்கிறார்

இந்த நிலையில் தீபக் சஹர் இலங்கை தொடரில் பயிற்சியாளராக பணியாற்றிய டிராவிட் உடன் உரையாடியது மற்றும் தனது அனுபவம் குறித்து சமீபத்தில் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறுகையில் இலங்கை தொடர்பாக அங்கு சென்றடைந்தோம் டிராவிட் சார் என்னிடம் உன்னுடைய வயது என்ன என்று கேட்டார். அதற்கு உடனே நான் 28ஆகிறது விரைவில் 29 வயது ஆக உள்ளது என சொன்னேன்.

ராகுல் டிராவிட் மீண்டும் என்னிடம் அவர் நீ நிஜமாகவே உன்னுடைய வயதை சரியாக சொல்கிறாயா என கேட்டார். கிரிக்கெட்டுக்காக உன் வயதை மாற்றி கொண்டாயா எனவும் கேட்டறிந்தார். அதற்கு நான் இல்லை சார் என்னுடைய உண்மையான வயதை தான் சொல்லுகிறேன்.

என்னுடைய தந்தை விமானப்படையில் வேலை செய்வதால் வயது விவகாரத்தில் எந்த விதத்திலும் தில்லுமுல்லு செய்ய முடியாது என கூறினேன் . டிராவிட்டின் பயிற்சியின் கீழ் பேட்டிங் மற்றும் பவுலின் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்

Leave a Comment