கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வணிக வளாகங்கள் கல்லூரி, பள்ளி, திரை அரங்குகள் என எல்லாவற்றையும் மூடப்பட்டுள்ளது அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். எதிர்பாராத நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவினால் அனைத்து தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை செய்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் கூலித் தொழிலாளர் நிலை மிகவும் மோசமாகி உள்ளது.அதுபோல திரைப்பட தொழிலையே நம்பி இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் மற்றும் நலிந்த கலைஞர்களுக்கும் சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர் அந்த வகையில் தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் 3 கோடி நிதி உதவியாக அளித்துள்ளார். இதுவரையிலும் யாரும் இவ்வளவு பெரிய தொகை கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் செயலை கண்டு மற்ற பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான அட்லி அவர்கள் தற்பொழுது நிதி உதவி பற்றி தகவல் வெளியாகி உள்ளது அந்தவகையில் பெப்சி தொழிலாளர்களுக்கு 5 லட்சமும் மற்றும் இயக்குனர் சங்கத்திற்கு 5 லட்சமும் மொத்தம் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ”கை சிவக்க அள்ளி கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ் கிள்ளி கொடுத்த அட்லி” என கூறி வருகின்றனர்.