தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் அதிகமாக சினிமா உலகில் வெற்றி படங்களை கொடுத்துள்ளவர் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் மூன்றாவது கட்டப்படிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ஜெயசுதா, குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்குகிறார் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு..
அடுத்ததாக லோகேஷ் உடன் கைகோர்த்து தனது 67வது திரைப்படத்திலும் விஜய் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. சினிமா உலகில் பல கஷ்டங்களை சந்தித்து படிப்படியாக தனது திறமையை வளர்த்து சினிமா உலகில் வெற்றி நாயகனாக ஓடிக்கொண்டிருக்கும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் ரசிகர்களை அப்போ பொழுது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்பு கொண்டு பேசுவதும் வழக்கம் விஜய் ட்விட்டரில் இருக்கிறார் ஆனால் அவ்வளவாக ஆக்டிவாக இருப்பதில்லை ஆனால் கத்தி பட ரிலீஸ் சமயத்தில் விஜய் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடி உள்ளார் அப்பொழுது ரசிகர் ஒருவர் சூப்பர் ஸ்டார் அல்லது இளைய தளபதி உங்களுக்கு பிடித்த தலைப்பு எது என கேட்டனர்.
அதற்கு அவர் நான் நடிக்க ஆரம்பித்தவுடன் மக்களுக்கு என்னை பிடித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தேன் நான் எதிர்பார்த்ததை விட மேலாகவே உங்களுக்கு என்னை பிடித்திருக்கிறது உங்கள் அன்பிற்கு முன்னாள் எனக்கு எந்த ஒரு தலைப்பும் பெரிதாக தெரியவில்லை என அவர் போட்டிருந்தார்..