கௌதம் மேனன் ஸ்டைலில் இறங்கி அடிப்பது என்றால் அது இதுதான்..! புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்..!

மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான்  இயக்குனர் கௌதமேனன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் நடிகர் சிம்புவை வைத்து வேந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தை ப்ளூ சட்டை மாறன் என்பவர் மிகவும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் பார்த்திபன் ஒரு அவார்ட் பைத்தியம் என்றால் கௌதம் மேனன் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம் என கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் மக்கள் போன படத்திலேயே இவரை கலாய்ததன் காரணமாக தான் இந்த திரைப்படத்தில் அப்புகுட்டி மூலம் ஓவர் வாய்ஸ்  கதை சொல்ல முடிவெடுத்துள்ளார்.

ஆகையால் இதிலிருந்து என்ன தெரிகிறது கௌதம் மேனனுக்கு இன்னும் பைத்தியம் குணமாகவில்லை என ப்ளூ சட்டை மாறன் கூறியது சமூக வலைதள பக்கத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இப்படி ஒரு சூழ்நிலையில் இயக்குனர் கௌதமேனன் பேட்டி ஒன்றில் பேசும் பொழுது ப்ளூ சட்டை மாறன் மேல் எனக்கு அவ்வளவு கடுப்பு.

அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காகவும் அவருடைய யூடியூப் சேனலை  பிரபலப்படுத்துவதற்காகவும் ஒரு திரைப்படத்தை மிகவும் தர குறைவாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் நீ ரிவியூ செய்வது தவறு கிடையாது ஆனால் இலக்கரமாகவோ தர குறைவாகவோ விமர்சனம் செய்யாதே என்று  கௌதம் மேனன் வான் செய்துள்ளார்.

மேலும் ப்ளூ சட்டை மாறன் அவர்கள் கௌதம் மேனன் சாதி பெயரை குறிப்பிட்டு விமர்சித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் கௌதம் மேனன் முதல் திரைப்படம் ஆன மின்னலே திரைப்படத்தில் தன்னுடைய பெயரை கௌதம் என்றுதான் குறிப்பிட்டிருந்தார் ஆனால் தற்போது கௌதம் மேனன் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் மேல் சாதி பெயரான மேனன் என்ற மேல் சாதி பெயரை போட்டுக்கொண்டு தன்னை தானே உயர்த்தி கொண்டார் சாதி பெயரை பின்னால் போட்டுக் கொள்வதை விரும்பாத தமிழகத்தில் கௌதமேனன் இப்படி ஒரு செயலை செய்துள்ளதை ப்ளூ சட்டை மாறன் கிண்டல் அடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இறங்கி செய்தல்  என கௌதம் மேனன் கூறிய வார்த்தைக்கு ப்ளூ சட்டை மாறன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் அதாவது இறங்கி செய்தல் ஒன்று அடியாட்களை ஏவி விட்டு அடித்தல் இரண்டாவது வழக்கு போட்டு சிறையில் தள்ளுதல் மூன்றாவது மற்றொரு ஹீரோவின் மார்க்கத்தை காலி செய்தல் நான்காவது இறங்கி துப்பாக்கியால் சுடுதல் ஆகியவையாகும்.

Leave a Comment