அதிர்ஷ்டம் கூறைய பிச்சிட்டு கொட்டுகிறது என்பது இதுதானோ.! சூர்யா 42 திரைப்படத்தை தொடர்ந்து பிசினஸில் இறங்கிய வாடிவாசல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கம் சூரியன் 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு வரலாற்று படமாக உருவாகி வருவதால் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடிகர் சூரியா அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விருப்பாக நடைபெற்று வரும் நிலையில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து சூர்யா 42 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

சூரியன் 42 திரைப்படத்திற்கு முன்பாகவே சூர்யா அவர்கள் வாடிவாசல் படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி எடுத்துக் கொண்ட வீடியோ வெளியாகி வைரலானது இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து சூர்யா அவர்கள் வெளியேறினார். அதன் பிறகு சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா உடன் இணைந்து தற்போது சூர்யா 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூரியன் 42 திரைப்படத்தின் பிஷினஷ் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் விரலானது. அந்த வகையில் சூர்யா 42 திரைப்படத்தின் மொத்த பிஸினஸ் மட்டுமே 500 கோடி என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது வாடிவாசல் திரைப்படமும் பிசினஸில் இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் விரைவில் சூரியன் 42வது திரைப்படத்தின் டைட்டில் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் சூர்யா அடுத்ததாக லியோ படத்தில் நடிக்கிறார் என்ற வதந்திகளும் பரவி வருகிறது.

Leave a Comment