விஜய்க்கு சிறுவயதில் இருந்து ஒரே ஆசை இதுதானாம் – உண்மையை உடைக்கும் அவரது தாய்

தளபதி விஜய் தொடர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவர் கடைசியாக நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக பீஸ்ட் படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 66 வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு  விசாகப்பட்டினம் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. வாரிசு படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ஜெயசுதா, குஷ்பூ.

மற்றும் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகிறனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் ஒருமுறை லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

தொடர்ந்து சிறந்த இயக்குனர்களுடன் விஜய் கை கோர்ப்பதால் அவரது மார்க்கெட் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.  தளபதி விஜய் சினிமா உலகில் தற்பொழுது நடித்து வருகிறார் ஆனால் இளம் வயதில் தளபதி விஜய்க்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசையே வரவில்லையாம் விஜய்க்கு காலேஜ் படிக்கும் பொழுது தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததாம்..

ஆனால் ஏழாவது படிக்கும் பொழுது விஜய்க்கு பைலட்டாக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம் இதை அவரது அப்பா அம்மாவிடமே அவர் கூறியுள்ளார். ஆனால் அவரது எண்ணம் கடைசியில் நடிகனாக மாறிவிட்டது இதை அவரது அம்மா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment