விஜயின் 65 – வது பட தலைப்பு இதுவா.? சமூகவளைதள பக்கதில் தீயாய் பரப்பும் ரசிகர்கள்.!

சினிமாவுலகில் இருப்பவர்கள் எப்போதும் வெற்றியை கொடுத்து தன்னை வளர்த்துக் கொண்டு செல்வார்கள் அந்த வகையில் தளபதி விஜய் தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள  படங்களை கொடுப்பதால் அவரது மார்க்கெட் தற்போது வேற லெவல் எதிரி உள்ளது.

மேலும் நடிகர் விஜயை பிற மொழிகளிலும் நடிக்க காசுகளை கூட்டி கொடுத்து இழுக்க தயாராக இருக்கின்றனர் இப்படி சினிமாவில் இருக்கும் தளபதி விஜய் தற்போது தன்னுடைய 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜயின் 64-வது திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த தொடர்ந்து அதுபோல ஒரு பிரமாண்ட படத்தை கொடுக்க தற்போது நெல்சன் திலிப்குமார் உடன் கைகோர்த்துள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த கோலாகலமாக வந்த படக்குழுவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததுகொரோனா.

அதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு விஜயும், ஹீரோயினுடன் இணைந்து நடித்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்தப் படத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோரை  தவிர வேறு யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லப்படாமல் இருக்கிறது.

ஆனால் டிவிடி கணேஷ், அபர்ணா தாஸ் போன்றோர் நடிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தை மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் படம் தயாராகி வருகிறது இதனால் இந்த படத்தின் தலைப்பு வேற லெவல் இல் இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு ஒரு சிறப்பான தலைப்பை வைக்க முயற்சி செய்து வருகிறது.

இந்த படத்தின் தலைப்பு வருகின்ற 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியே வர உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் பெயர் “டார்கெட்” என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment