தமிழ் சினிமாவின் பல்வேறு இசையமைப்பாளர்கள் உள்ளார்கள் அந்த வகையில் இவர்கள் பலரும் தற்போது திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அந்த வகையில் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்றவர்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இந்நிலையில் அதற்கு மாறாக இசையமைப்பாளராக இருந்துவிட்டு தற்போது வில்லனாக கலக்க உள்ளார் ஒரு இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் கடந்த 2012ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த திரைப்படமாக இருந்ததன் காரணமாக ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற வசூலிலும் வெளுத்து வாங்கியது. அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நந்திதாவின் நண்பராக ஒருவர் பஞ்ச் டயலாக் பேசுவார்.
இவ்வாறு அந்த திரைப்படத்தில் பஞ்ச் டயலாக் பேசிய அந்த நபர் பெயர் சித்தார்த் விபின் இவர் நடிகர் மட்டுமின்றி இந்த திரைப்படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளரும். மேலும் இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, காஷ்மோரா, போன்ற பல்வேறு திரைப்படத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருப்பார்.

அதுமட்டுமில்லாமல் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஜாக்சன் துரை, முத்தின கத்திரிக்காய், ஜூங்கா, கேப்மாரி போன்ற திரைப் படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் தற்சமயம் தன்னுடைய மனைவியுடன் குடும்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது யாஷிகா நடிப்பில் உருவாகும் சல்பர் என்ற திரைப்படத்தில் நமது இசையமைப்பாளர் தான் வில்லனாக நடிக்க உள்ளார்.