ஆக்சன் கிங் அர்ஜுன் மனைவியா இது.? அழகில் மகளையே தோற்கடிக்கும் அம்மா.

arjun

சினிமாவுலகில் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகர்களுக்கு எப்பொழுதும் பட வாய்ப்புகள் கிடைக்கும் அந்த வகையில் தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் ஒரே நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி இருந்தாலும்..

ஒரு கட்டத்தில் வயது அதிகமாக அதிகமாக இப்பொழுது ஹீரோவுக்கு வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அந்த வகையில் ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், ஏழுமலை, பரசுராம், ஒற்றன், முதல்வன் போன்ற படங்கள் ரசிகர்களுக்கு இன்றும்.

ஃபேவரட்டான படங்களாக இன்றும் இருக்கின்றன. சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா  என இரு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் விஷால் உடன் இணைந்து பட்டத்து யானை என்ற திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து அவ்வபோது படங்களில் தலைகாட்டி நடித்து வருகிறார் நடிகர் அர்ஜுன் இப்பொழுது படங்களில் நடிப்பது மற்றும் படங்களை இயக்குவதில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சன் கிங் அர்ஜுன் சினிமா, குடும்பம் என சிறப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறார் இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தனது இருமகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில்  வைரலாகி வருகிறது மேலும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

arjun family
arjun family