யுவன் சங்கர் ராஜா “வலிமை” திரைப்படத்திற்கு இசையமைக்காமல் போனதற்கு முழு காரணம் இது தான்.? வெளிவந்த உண்மை தகவல்.!

அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள திரைப்படம் வலிமை. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், செண்டிமெண்ட், த்ரில்லர் என அனைத்தும் கலந்து இருந்ததால் அஜித் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது

ஆனால் வசூலில் மட்டும் எந்த குறைபாடும் இல்லை. ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால் படக்குழு எதிர்பார்க்காத வசூல் வேட்டையை நடத்தி உள்ளது மேலும் பல்வேறு டாப் நடிகர்களின் படங்களின் வசூலையும் முந்தி முதலிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி அஜித்தின் வலிமை திரைப்படம் நாளுக்கு நாள் பல சாதனைகளை புரிந்து கொண்டுதான் இருக்கிறது.

வலிமை படம் அஜித்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் காரணம் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் ஆனது கிடையாது முதல் முறையாக வலிமை படம் இந்திய அளவில் ஒரே நாளில் ரிலீஸ்ஸாகி அசத்தியது இதுவரை வலிமை திரைப்படம் 200 கோடிக்கும் மேல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை 9.5 கோடி அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில்  யுவன் சங்கர் ராஜா வலிமை திரைப் படத்திற்கு இசையமைக்க முதலில் கமிட்டானார் என்பது ஊர் அறிந்த விஷயம். இருப்பினும் இந்த படத்தில் இசை அமைக்காமல் போனது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. காரணம் இந்த படத்தில் 2 பாடல்கள் ஒரு தீம் மியூசிக் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

ஆனால் வழக்கம் போல யுவன்சங்கர்ராஜா 6 பாடலுக்கு இசை அமைத்தால் எவ்வளவு சம்பளம் வாங்குவரோ அந்த சம்பளத்தை இந்த படத்திற்கும் கேட்டுள்ளார். ஆனால் இரண்டு பாடல்களுகான சம்பளத்தை மட்டுமே தருவோம் என தயாரிப்பாளர் கூற உடனடியாக இந்த படத்தில் இருந்து அவர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது அதற்குப் பிறகுதான்  சிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைத்த தாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment