மாவீரன் திரைப்படத்தில் “அதிதி ஷங்கரை” கமிட் செய்ய முழு காரணம் இதுதான் – ரகசியத்தை உடைத்த பிரபல பத்திரிகையாளர்.!

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆனால் அந்த நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்து அசத்தினால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும். ஆனால் ஒரு சிலரோ எடுத்தவுடனே வெற்றி படங்களை கொடுத்து அசத்துவார்கள்.

அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர்  ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். முதல் படமான நடிகர் கார்த்தியின் விருமன் படத்தில் தனது அனைத்து திறமையும் வெளிகாட்டி அசத்தியுள்ளார் தற்பொழுது இவருக்கு என ரசிகர்களும் உருவாகியுள்ளனர் விருமன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை அதிதி ஷங்கருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அதில் ஒன்றாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன். உடன் கைகோர்த்து மாவீரன் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என கூறப்பட்டது. தொடர்ந்து அதிதி சங்கருக்கு டாப் நடிகரின் வாய்ப்புகள் குவிவது மற்ற நடிகைகளை எரிச்சல் அடைய வைத்துள்ளது மேலும் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அதிதி ஷங்கரை மாவீரன் திரைப்படத்தில் கமிட் செய்ய என்ன காரணம் என்பது குறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மாவீரன் திரைப்படத்தில் அதிதி ஷங்கரை நடிகர் சிவகார்த்திகேயன் கமீட் செய்து காரணம் ஆதித்தியின் தந்தை மிகப்பெரிய ஒரு இயக்குனர் என்ற பிராண்ட் என்கின்ற காரணத்தினால் தானாம்.

அதனால் தான் அதிதி ஷங்கரை மாவீரன்  படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க முடிவெடுத்ததாக கூறினார். சிவகார்த்திகேயன் தனது படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்ய எந்த எல்லைக்கும் செல்வார் என பலரும் கிசுகிசித்தனர் அதில் ஒன்று தற்பொழுது நம் கண்முன்னே நடந்து விட்டது என பலரும் கூறி சொல்லி வருகின்றனர்.

Leave a Comment