ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் இதுதான்.! ஒன்னும் சரக்கு இல்லையோ.?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏஆர் முருகதாஸ் ஆனால் சமீபகாலமாக இவரின் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பதில்லை ஆனால் இதற்க்கு முன் வெற்றி இயக்குனராக வளம் வந்தவர்  என்றே கூறலாம். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கே தெரியும். அந்தளவு மோசமாக திரைப்படம் அமைந்துவிட்டது.

தர்பார் திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் கடுப்பானார்கள். ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் இனி சரக்கு இல்லை என பலரும் பேசினார்கள். அதனால்தான் ஏ ஆர் ரகுமானுக்கு பல நடிகர்கள் கால்ஷீட் தரவில்லை. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய தீனா, ரமணா, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி ஆகிய மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர்.

ஆனால் சமீபகாலமாக தர்பார், ஸ்பைடர் என சுமாரான வரவேற்பை கொடுத்து வருகிறார். அதேபோல் சர்க்கார் திரைப்படம் விஜயை வைத்துதான் ஓடியது விஜய் மட்டும் அந்த திரைப்படத்தில் நடிக்க வில்லை என்றால் அந்த திரைப்படமும் ஊத்தி மூடிக்கொள்ளும். இது தளபதி ரசிகர்களுக்கு தெரியும்.

AR murukadhas
AR murukadhas

அதுமட்டுமில்லாமல் விஜய் தளபதி 65 திரைப் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்தார் ஆனால் ஏ ஆர் முருகதாஸ் கதையை சொன்னதும் அய்யோ சாமி ஆள விடுங்க என துரத்தி விட்டாராம் விஜய். அந்தளவு மோசமான கதையை கூறியுள்ளார் என  தகவல் வெளியானது. இந்த நிலையில் படத்தை இயக்குவதற்கு கொஞ்சம் காலம் இடைவெளி விடலாம் என முடிவு எடுத்து தற்போது தயாரிப்பில் இறங்கி விட்டார்.

ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலை தற்போது வெளியிட்டுள்ளார் அடுத்த படத்திற்கான டைட்டில் 1941 என வைத்துள்ளார்.இந்த திரைப்படத்தை பொன் குமரன் என்ற இயக்குனர் இயக்கி வருகிறார் படத்தை தமிழ் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment