சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தின் டைட்டில் இதுவா.! பழைய படத்தின் டைட்டில் ஆச்சேப்பா..

சிறப்பான படங்களை தமிழ் சினிமாவிற்கு சமீபகாலமாக கொடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.

அதன் காரணமாகவே இவருக்கு பல விருதுகள் வந்து சேர்கின்றன அந்த வகையில் தனுஷை வைத்து சமீபத்தில் அசுரன் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதோடு மக்களுக்கு சமூக அக்கரை உள்ள கருத்துக்களை எடுத்துக் கூறியது.

இதன் காரணமாகவே இந்த திரைப்படம் தற்போது பல விருதுகளை தட்டிச் சென்றது அதில் ஒன்று தேசிய விருதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வெற்றிமாறன் அசுரன் என்ற மாபெரும்  படத்தை தொடர்ந்து சூரியை வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம்.

வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய சேதுபதியை வைத்து இயக்குவதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவெலில் ஏறி உள்ளது.

இந்த திரைப்படத்துக்கு இறுதிவரை பெயர் வைக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு “விடுதலை” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த டைட்டிலில் ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல், விஜய் மற்றும் தனுஷை வைத்து அடுத்தடுத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தெரியவருகிறது.

Leave a Comment

Exit mobile version