ராம் சரண் நடிக்கும் RC 15 படத்தின் டைட்டில் இதுதான்.! வெளியான சூப்பர் தகவல்…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ராம் சரண் இவர் தற்போது பல திரைப்படங்கள் நடித்து வருகிறார். என்னதான் இவர் வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியினால் தற்போது முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம்.

இதனை தொடர்ந்து நடிகர் ராம் சரண் அவர்கள் தற்போது ஆர்சி15 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் சங்கர் அவர்கள் ஆர் சி 15 மட்டுமல்லாமல் இந்தியன் 2 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் இயக்கி படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த இரண்டு படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ராம்சரண் அவர்கள் நடித்து வரும் ஆர் சி 15வது திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் rc 15 திரைப்படத்தின் டைட்டில் கேம் சேஞ்சர் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் ராம் சரண் அவர்களுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாகவே இயக்குனர் சங்கர் அவர்களின் படம் என்றால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இதனை தொடர்ந்து தற்போது ஆர் சி 15 திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

விரைவில் இது குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த அப்டேட் ராம்சரனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ளதாக கூறபடுகிறது.

Leave a Comment