ரஜினியின் அடுத்த பட தலைப்பு இதுதான் – வெளியே வந்த புதிய போஸ்டர்.! அதிகாரபூர்வமான தகவல்.

தமிழ் சினிமா உலகில் அதிக வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் ரஜினிகாந்த்.  இவர் கடைசியாக சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து அண்ணாத்த என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று 200 -கோடிக்கு மேல் வசூல் செய்தது இருப்பினும் ரஜினி லெவெலுக்கு இது கம்மி என்பதை நன்கு உணர்ந்து கொண்டார்.  இந்த படத்தில் செய்த தவறு அடுத்த படத்தில் இருக்க கூடாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு சிறந்த இயக்குனரிடம் கதை கேட்டு தற்போது தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார் இவர் இதற்கு முன்பாக கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் ரஜினியின் அடுத்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என பலரும் கூறி வருகின்றனர்.

ரஜினி – நெல்சன் இணையும் 169 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது இந்த படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் மற்றபடி நடிகர், நடிகைகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து வருகிறார் நெல்சன் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் அடுத்தபட தலைப்பு

ஜெயிலர் என கூறப்பட்டு வந்தது ஆனால் இது ஒரு வந்தியாக இருந்து வந்த நிலையில் இன்றைய அதிகாலை 11 மணிக்கு படக்குழு அதிரடியாக கூறி உள்ளது தலைவர் 169 படத்தின் தலைப்பு ஜெயிலர் என திட்டவட்டமாக கூறியுள்ளது. ஒரு நீண்ட கத்தி ரத்தம் சொட்ட சொட்ட இருப்பது போல போஸ்டர் வெளிவந்துள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

rajini
rajini

Leave a Comment