அஜித்தின் அடுத்த பட தலைப்பு இதுதான்.? இப்பவே கொண்டாட்டத்தை ஆரம்பித்த தல ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் அனைவருக்கும் ரொம்ப பிடித்து போயிருந்தது.

தொடர்ந்து பாசிட்டிவான  விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 62வது திரைப்படத்தில் நடிக்க அதிகம் ஆசைப்பட்டார். முதலில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் சொன்ன கதையின் இரண்டாவது பாதி அந்த அளவுக்கு திருப்திகரமாக இல்லாததால்..

தயாரிப்பு நிறுவனம் அவரை வெளியே தள்ளியது அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை அழைத்து கதை கேட்டது . அவர் சொன்ன கதை சிறப்பாக இருந்தாலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற மே 1ஆம் தேதி இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்பட்டு வெகு விரைவிலேயே சூட்டிங் தொடங்கப்பட இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் ..

பெரிய செய்தி கிளம்பிய நிலையில் நாளை தான் மே 1   இரவு 12 மணிக்கு ஏகே 62 படத்தின் அப்டேட் வரும் என பெரிய அளவில் தகவல்கள் கசிகின்றன. அதிலும் குறிப்பாக ak 62 படத்தின் தலைப்பு வெளியாகும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில்  62 தலைப்பு இதுதான் என ஒரு செய்தியும் வெளியாகி உள்ளது.

அதன்படி “விடாமுயற்சி” என தலைப்பு இருக்கும் என கூறப்படுகிறது அது இல்லை என்றால் வேறு ஒரு பெயரும் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.  இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது நடிகர் அஜித் ரசிகர்களும் இதை கொண்டாடி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version