உண்மையை சொன்னா கசக்கத்தான் செய்யும்.! உலக கோப்பையை வெல்லும் அணி இதுதான் – ஸ்டுவர்ட் பிராட் பேச்சு

World cup 2023 : அக்டோபர் ஐந்தாம் தேதி உலககோப்பை கோலாகலமாக தொடங்க இருக்கிறது இதற்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக பயிற்சி செய்து வருகிறது.  முதல் போட்டி நாளை தொடங்க உள்ளது இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. வருகின்ற எட்டாம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

மொத்தம் 58 போட்டிகள். உலக கோப்பை போட்டி இந்திய மண்ணில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு அதிகம் சாதகம் என சொல்லுகின்றனர் இருந்தாலும் ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்த், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா என ஒவ்வொரு அணியும் சம பலத்துடன் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர்  ஸ்டுவர்ட் பிராட் ஓப்பனாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வது மிக கடினம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்காக இங்கிலாந்த் அணி மிக கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படும்.

என்னைப் பொறுத்த வரையில் இந்திய அணி இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என கருதுகிறேன் இந்திய அணியை தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இந்திய அணியை கட்டுப்படுத்துவது சாதாரண விஷயமாக இருக்காது எந்த அணியாலும்..

இந்திய அணியை கட்டுப்படுத்த முடியாத இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதே இந்திய அணி தற்போது தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதும் அந்த அணிக்கு சாதகமானதாக அமையும் இந்திய அணியும் இங்கிலாந்து அணியுமே இறுதிப் போட்டிக்கு தகுதி வரும் இதில இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதே எனது கருத்து என தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்