எஸ் எஸ் ராஜமௌலியை ஆச்சரியப்படுத்திய தமிழ் இயக்குனர் இவர்தான் – மேடையில் புகழ்ந்து பேசிய தருணம்.!

சினிமாவுலகில் படத்தை எடுத்தோம், ஹிட் கொடுத்தோம் என்று இல்லாமல் தான் எடுக்கும் படங்கள் வசூல் வேட்டை நடத்துவதையும் தாண்டி மக்கள் மற்றும் ரசிகர்களை பெரிய அளவில் கவர வேண்டும் அதுவே எனது சந்தோஷம் என நினைத்து மொத்தம் 20 ஆண்டுகளாக 12 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டவர் எஸ்எஸ் ராஜமௌலி.

இவர் இயக்கத்தில் வெளியாகி முதலில் சூப்பர் ஹிட் திரைப்படம் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிரம்மாண்ட வெற்றிதான் குறிப்பாக பிரபாஸை வைத்து பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது அதன்பிறகு இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

சிறு இடைவெளிக்கு பிறகு எஸ்எஸ் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணை வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் RRR. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருந்தது. படம் வெளிவந்து  ரசிகர்களையும் தாண்டி மக்களும் அதிகம் ஆர்வமாக பார்த்து கொண்டாடனர்.

ஒரு வழியாக கடந்த 24ஆம் தேதி உலக அளவில் படம் ரிலீசானது. இதுவரை RRR திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது : சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் என்னை கவர்ந்த திரைப்படம் என்றால் அது அசுரன். இந்த படத்தை வெற்றிமாறன் வேற லெவலில் எடுத்திருந்தார். மேக்கிங் ஸ்டைல் வித்தியாசமாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது அத்துடன் அவரை போல படத்தை இயக்குவது கொஞ்சம் கஷ்டம்தான் என்று ராஜமமொழி வெற்றிமாறனை புகழ்ந்து பேசினார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானஅசுரன் திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தில் தனுஷுடன் கைகோர்த்த கென் கருணாஸ், மஞ்சு வாரியர் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் இரண்டு தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது சிறந்த தமிழ் படத்துக்கான விருதும், சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment