“டாக்டர்” படத்தின் கதை இதுதான்.? டிரைலரில் காட்டுனது எல்லாம் சும்மா.? மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.

0

சினிமாவில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் குடும்பங்களை கவரும் படியான திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்டு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர்  ரஜினியின் பாணியைத்தான் தற்போது இவரும் பின்பற்றுகிறார் ஏனென்றால் ரஜினி எப்பொழுதும் ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படங்களையே பெரிதும் தேர்வு செய்து நடிப்பது வழக்கம்.

அதையே தற்போது சிவகார்த்திகேயனும் செய்து வருவதால் அவரது படத்திற்கான வரவேற்பு வேற அளவில் இருப்பதோடு வசூலை வாரிக் குவிக்கின்றன அந்த காரணத்தினால் தான் நடிகர் சிவகார்த்திகேயன் குறைந்த படங்களிலேயே அதிகம் சம்பளம் வாங்குவதற்கான காரணமாக கூறப்படுகிறது. இவரது நடிப்பில் தற்போது பல்வேறு விதமான திரை படங்கள் அடுத்தடுத்து வெளியாக ரெடியாக இருக்கின்றன.

அந்த வகையில் டாக்டர், டான், அயாலன் போன்ற படங்கள் வெளிவர இருக்கின்றன அதிலும் குறிப்பாக முதலில் “டாக்டர்” திரைப்படம் வருகின்ற அக்டோபர் 9ம் தேதி வெளியாக ரெடியாக இருக்கிறது சமீபத்தில் தான் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது இது தற்போது யூடியூபில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

டாக்டர் படத்தின் டிரைலரை மக்களை தற்போது அதிகம் கவர்ந்து உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இந்த படத்தின் ட்ரைலரில் சிவகார்த்திகேயன் ஒரு குரூப் அமைத்துக்கொண்டு குழந்தைகளின் உறுப்புகளை திருடுவது போல் கணிக்கப்பட்டு இருந்திருக்கும் ஆனால் உண்மையில் அது கிடையாது.

ஆனால் உண்மையில் வில்லன் குரூப் தான் அந்த குழந்தைகளை கடத்தி உறுப்புகளை திருடுவதற்கு முயற்சி செய்யும் அந்த குழந்தைகளை அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைப்பதுதான் சிவகார்த்திகேயனின் நோக்கம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.