SK 21 படத்தின் கதை இதுதான்..! ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயன் – பிஸ்மி பகிர்ந்த தகவல்

sivakarthikeyan
sivakarthikeyan

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வரும் சிவகார்த்திகேயன். இவர் கடைசியாக மடோன் அஸ்வினுடன் கைகோர்த்து மாவீரன் படத்தில் நடித்தார் அவருடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி காதல் என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால்  கவனம் பெற்றது.

அதனால் படம்  அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பியது இதுவரை மட்டுமே 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மாவீரன் படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில்  சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 21 வது படம் பற்றி  வலைப்பேச்சு பிஸ்மி பேட்டியில் சொல்லியது என்னவென்றால் SK 21 படம் ராணுவ பின்னணி கதைகளத்தை கொண்டது இந்த படத்தின் கதை சென்னை புறநகரில் வசீத்த ராணுவ வீரர் முகுந்த்  வரதராஜனின் பயோபிக் தான் இந்த படத்தின் கதை..

அவர் பத்திரிக்கையாளராக வேண்டுமென்று ஆசைப்பட்டு ஜெனலிஷம் படிக்கிறார் அதன் பிறகு அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைக்கிறது கடைசியில் தீவிரவாதிக்கும் ராணுவ வீரர்களும் நடந்த சண்டையில் அவர் வீர மரணம் அடைந்து விடுகிறார் இந்த ராணுவ வீரரின் கதையைத்தான் இவர்கள் படமாக எடுத்து வருகிறார்கள்.

முகுந்த் வரதராஜனின் கேரக்டரில் தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் இந்த படத்தின் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் கொல்லப்படும் இதுதான் மிகவும் முக்கியமான ஒன்றும் இந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியாரில் மிக முக்கியமான படமாக இருக்கும் எனவும் கூறினார்.