பிரன்ஸ் கதை இதுதான்.? போற போக்கில் கார்த்திக்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்.! ஒருவேளை சர்தார் படத்திற்கு எச்சரிக்கையா.?

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தமிழில் குறுகிய ஆண்டில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்கரரைன் நாட்டைச் சேர்ந்த மரியா அவர்கள் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் சூர்யா அவர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தின் ப்ரீ பிரமோஷன் நடைபெற்று வருகிறது இதில் பல பிரபலங்கள் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டநர் அது மட்டும் இல்லாமல் அவர்களுடைய விருப்பங்களை தெரிவித்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் அவர்கள் இந்த படம் ஒரு சுவாரஸ்யமான கதைகளைக் கொண்டுள்ளதாகவும் மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் அவர்கள் இது ஒரு காமெடி திரைப்படம் அது மட்டுமல்லாமல் தீபாவளி அன்று வெளியாகும் முதல் திரைப்படம் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் கார்த்தி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியுள்ளார்.

கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதால் இந்த இரண்டு படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது இதில் எந்த படம் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் ஹாட்ரிக் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் ஏனென்றால் இவர் நடிப்பில் வெளியான டான் மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தற்போது பிரின்ஸ் திரைப்படமும் தொடர்ச்சியாக வெளியாக உள்ளதால் இந்த படமும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version