ஆண்களுக்கு மத்தியில் உடை மாற்ற சொல்லி துன்புறுத்துவார்கள்.. சினிமாவில் நடிகைகளின் நிலமை இதுதான்.! நடிகை காயத்ரி வேதனை

Actress Gayathri: நடிகை காயத்ரி கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் பட்டித் தொட்டியெங்கும் பிரபலமானவர்.

அந்த வகையில் இந்த படத்தினை தொடர்ந்து பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அதிகம் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி கடைசியாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் மாமனிதன். இந்த படத்தில் காயத்ரி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குடும்ப தலைவியாக நடித்து இருந்தார் இவருடைய நடிப்பு இந்த படத்தில் பாராட்டப்பட்டது.

மேலும் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் பகத் பாசிலின் காதலியாக நடித்திருந்தார். இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்து வரும் காயத்ரி சினிமாவில் பெண்களின் நிலை குறித்து சமீப பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதில், அவர் பொதுவாகவே சினிமா உலகில் நிறைய பேர் வந்து செல்வார்கள் அதில் சிலர் மட்டும்தான் நமக்கு நண்பர்களாக இருப்பார்கள் எனக்கு மணிரத்தினம், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே ஆசை. அதே போல் ஒரு படத்திற்கு சென்றால் அங்கு என்னை சுற்றி நிறைய ஆண்கள் இருப்பார்கள் அங்கு நான் மட்டும்தான் ஒரு பெண்ணாக இருப்பேன்.

ஒரு பொண்ணுக்கு அவசரமான நிலையில் ஒரு பாத்ரூம் வேண்டும் என்பதை கூட அவர்கள் எளிதாக உணர மாட்டார்கள் அது ஏற்பாடு செய்து கொள்ளவும் தாமதம் செய்வார்கள். அது மட்டுமல்லாமல் உடை மாற்றுவதற்கு போன்ற அத்தியாவசியமான தேவைகள் ஒரு பெண்ணிற்கு தேவை என்பதையும் நினைக்க மாட்டார்கள். ஒரு சில சமயங்களில் வேறு ஒரு இடத்திற்கு காரில் செல்லும் பொழுது சிறிய ஷாட் எடுக்க வேண்டும் என்பதால் காரிலேயே உடை மாற்றிக் கொள்ள முடியுமா? என்று கேட்பார்கள். அதெல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கும் இந்த நிலை சினிமாவில் மாற வேண்டும் பெண்களுக்கு என்ன அத்தியாவசிய தேவை என்பதை ஆண்கள் புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்பாடு செய்யத் தந்தால் நன்றாக இருக்கும் என கூறி இருக்கிறார்.

Leave a Comment