ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தணிக்கை சான்றிதழ் காரணமாக தள்ளி போயிருக்கிறது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விசாரித்த நீதிபதி ஜனவரி 21ஆம் தேதி வழக்கை தள்ளி வைத்துள்ளார்.
இது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எப்படியும் ஓரிரு தினங்களில் படம் வெளியாகி விடும் பொங்கலை தரமாக கொண்டாடலாம் என்று இருந்தவர்களுக்கு பேரிடி தான்.
தயாரிப்பு தரப்பும் கூட அடுத்த கட்ட ஆலோசனையை நடத்தி வருகிறது. சில பிரபலங்கள் கூட விஜய் படம் எப்ப வருதோ அன்னைக்கு தான் பொங்கல் என ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இந்த ஏமாற்றம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சீக்கிரம் முடிய என்ன தான் வழி என ஒரு பக்கம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் மூத்த வழக்கறிஞர் நாளை காலை கூட தயாரிப்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்காக இதை எடுத்து தீர்ப்பளிக்க கூறி முறையிடலாம்.
ஆனால் இவ்வளவு அவசரமாக விசாரிப்பதற்கு இந்த வழக்கு அவ்வளவு முக்கியமானதா என்பதையும் கருத்தில் கொள்வார்கள். அப்படி பார்த்தால் இது சாதகமாகவும் முடியலாம் பாதகமாகவும் முடியலாம் என கூறி இருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தணிக்கை குழு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொன்னபோது ஒப்புக்கொண்டிருக்கலாம். தேவையில்லாமல் கோர்ட்டுக்கு சென்று இப்போது இரு தரப்புக்கும் ஈகோ வந்துவிட்டது. இதை வைத்து அரசியல் செய்யலாம் என்று காத்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சி தான் என சினிமா விமர்சகர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கூறி வருகின்றனர்.