ஒரு காலத்தில் முன்னணி நடிகர்கள் நான் நீ என போட்டி போட்டுகொண்டு நடித்த த்ரிஷாவுக்கா இந்த நிலைமை.! ரசிகர்கள் கவலை

0

பொதுவாக நடிகைகள் என்றாலே சினிமாவில் குறிப்பிட்ட காலம் வரை தான் முன்னணி நடிகைகளாக பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் கிட்டத்தட்ட  இருபது ஆண்டுகளாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகை திரிஷா.

இவர் முன்னணி நடிகையாக நடித்த காலகட்டத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பல வெற்றி படங்களை குவித்தார். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தன் முத்திரையை பதித்தார்.

இந்நிலையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது இளமைப் பருவத்தை இழந்த திரிஷாவிற்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட காலங்கள் கழித்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது சுத்தமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இவரின் மார்க்கெட் குறைந்து விட்டது. இவ்வாறு படம் இல்லாமல் தவித்து வரும் திரிஷாவிற்கு மீண்டும் வேதனை தரும் விதமாக இவருக்கு ஜோடியாக புதிய நடிகர்களுடன் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

trisha-01
trisha-01

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் நடந்தது பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இவரைத் தொடர்ந்து தெலுங்கு நடிகரான ராணாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்காதது போல் ராணா கடந்த வருடம் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது திரிஷா திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார்.

எனவே த்ரிஷாவின் நிலைமையை பார்த்த ரசிகர்கள், முன்னணி நடிகர்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டு  வருகிறார்கள்.