சூர்யாவின் சூரரை போற்று படத்தின் ரன்னிங் இவ்வளவு நேரம் தான்.!

0

surya movie suraraai potru running time: தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் தற்போது நடித்து முடித்துள்ள படம் சூரரை போற்று இத்திரைப்படம் OTTயில் வெளியாக உள்ளது என்பதே நம் அனைவருக்கும் தெரியும்.

இப்படத்தின் புதிய பல அப்டேட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடி வரை வசூலித்து விட்டது. இது அவரது ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

சூர்யா நடித்துவரும் சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்குனர் சுதா கங்காரோ இயக்கி உள்ளார்..இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்னதி பாலமுரளி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் நல்ல வசூல் வேட்டையை செய்யும் என்று சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சூர்யாவின் ரசிகர்களும் இப்படத்திற்காக காத்துக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படம் அக்டோபர் முப்பதாம் தேதி அமேசான் தளத்தில் வீடியோ ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர்கள் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்கள் இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இப்படம் 2 மணி 33 நிமிடங்கள் ரன்னிங் டைம்மை கூறியுள்ளார்கள்.