“கடைசி விவசாயி” படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுதான்.? வாயை திறந்தால் இதை தான் சொல்லிக்கொண்டே இருப்பாராம்.! அப்ப படம் ஹிட் தான் போல..

0

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. முக்கியத்துவம் உள்ள கதைகள் எங்கு இருந்தாலும் அங்கு இருப்பவர் விஜய் சேதுபதிதான் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றியை கொடுத்துள்ளதால் பல்வேறு இயக்குநர்கள் முதலில் விஜய் சேதுபதியை தான் அணுகுகிறார்கள். அந்த அளவிற்கு அசுர வளர்ச்சியை எட்டி உள்ளார்.

இதனால் தமிழ் சினிமாவில் இன்னும் 10 வருடத்தில் விஜய் சேதுபதியின் ஆட்டம் இருக்கும் என கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதிலும் அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.

மேலும் விஜய் சேதுபதி கையில் அரை டஜன் படங்களில் தன் வசப்படுத்தி உள்ளார் தமிழை தாண்டி தற்போது தெலுங்கில் இவருக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. இப்படி இருக்க இவர் நடித்த நான்கைந்து திரைப்படங்களில் இன்னும் வெளிவராமலே கிடப்பிலேயே கிடைக்கின்றன அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லாபம், கடைசி விவசாயி மற்றும் ஓரிரு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.  இந்த நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பர்ப்பது  “கடைசி விவசாயி”.

இப்படத்தில் விஜய் சேதுபதி 70 வயது விவசாயியாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார். அவருடன் இணைந்து யோகிபாபு வும் பின்னி பெடல் எடுத்து உள்ளார். இந்த நிலையில் இப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது விஜய் சேதுபதி முருக பக்தராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அவர் வாயைத் திறந்தாலே அறிவுரையும் தத்துவத்தையும் கொட்டுவதால் இந்த படத்தை எதிர்நோக்கி  ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இந்த திரைப்படத்தை மணிகண்டன் என்பவர் வேற மாதிரி இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது தாறுமாறாக ஏறி உள்ளது.