அமர்க்களம் படத்தில் “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடல் இடம்பெற இதுதான் காரணம் வெளிவரும் உண்மை தகவல்.!

0
ajith
ajith

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார் இவர் தற்பொழுது தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து கதைகளும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர்.

மற்றும் சமுத்திரக்கனி யோகி பாபு மகாநதி சங்கர் அஜய் ஜான் கோக்கேன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். AK 61 படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப்படிப்பிற்காக படக்குழு ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கில் ஸ்டன்ட் காட்சிகளை எடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்த பட குழு சூட்டிங் தொடராமல் இருந்து வருகிறது.

இந்த சமயத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர் போன்றவர்கள் அனைவரும் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளனர் தொடர்ந்து அதன் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் கேரியரில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது தான் அமர்க்களம் அந்த படத்தைப் பற்றி தான் தற்பொழுது முழு விழாவாரியாக பார்க்க இருக்கிறோம்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருந்தது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் செம்ம வெற்றி பெற்றன. குறிப்பாக சத்தம் இல்லாத தனிமை பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது பாடல் குறித்து விலாவாரியாக பார்ப்போம். சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல் பர்ஸ்ட் அமர்க்களம் படத்திற்காக எழுதவே இல்லையாம் வைரமுத்து கவிதை தொகுப்புகளில் படத்தின் இயக்குனர் சரண் படிக்கும்..

போது இது நல்லா இருக்கு படத்திற்கு பயன்படுத்தலாம் என சொன்னதன் விளைவாக படத்தில் இந்த பாடல் சேர்க்கப்பட்டதா மேலும் கவிதையில் கேட்டேன் என்பதற்கு பதிலாக வேண்டாம் வேண்டாம்  என்று தான் இருந்ததாம் கதைக்கு ஏற்றபடி கேட்டேன் என மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் இசையமைப்பாளர்  ஐந்து நிமிடத்தில் கம்போஸ் பண்ண படலாம் இது மேலும் எஸ்பிபி மூச்சு விடாமல் ஐந்து நிமிடத்தில் பாடி முடித்து விட பக்கத்தில் இருந்த இயக்குனர் சாரண் எஸ்பிபி காலில் அப்படியே விழுந்து விட்டாராம்