ஆக்க்ஷன் காமெடி ஆகிய திரைப்படங்களை தாண்டி செண்டிமெண்ட் படங்களும் மக்களுக்கு பிடித்து விட்டால் அந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். மேலும் அந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தும் என்பது மக்களின் கருத்து ஆனால் இது போன்ற படங்கள் சமீபகாலமாக பெரிய அளவு வரவில்லை.
என்றாலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறது. அந்த வகையில் சூரரைப்போற்று, கர்ணன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படமும் ஒரு வித்யாசமான திரைப்படமாக தற்போது அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தை சூர்யா தயாரித்து நடித்துள்ளார். டிஜே ஞானவேல் என்பவர் இந்த திரைப்படத்தை சிறப்பான முறையில் எடுத்துக் கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகா விட்டாலும் மாறுதலாக ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை அதிக அளவில் திசை திருப்பியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை தாண்டி பழங்குடியினராக நடித்தவர்களும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததினால் தான் தற்போது இந்த திரைப்படம் பெரிய அளவில் குறை சொல்ல முடியாமல் இருக்கிறது.
மேலும் பிரபலங்களும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு சிறந்த கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றன. இந்தப் படம் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததாம். மேலும் பல பிரபலங்கள் தனது சூப்பரான விமர்சனத்தையே கொடுத்து இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தை எடுத்த டிஜே ஞானவேல் ஜெய் பீம் படம் குறித்து பேசியதாவது : இந்த திரைப்படத்தின் கதை எனக்கு 15 வருடங்களுக்கு முன்பாகவே தெரியும்.
ஆனால் என் மனதிற்குள் வைத்துக் கொண்டிருந்தேன் இதற்கான ஹீரோ மற்றும் சரியான ஆட்கள் கிடைத்தால் எடுக்கலாம் என இருந்தேன் அதுபோல தற்போது அமைந்துவிட்டது. ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு உண்மையான அடக்குமுறை சம்பவத்தையடுத்து எடுத்துள்ளது மிகப்பெரிய விஷயம் என கூறி இயக்குனரை புகழ்ந்து பேசி வருகின்றனர்.