அருவி திரைப்படத்தில் நடித்த நடிகை நான்கு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு இதுதான் காரணமாம்..!

0
athithi-balan-2
athithi-balan-2

தமிழ் சினிமாவில் அறிவி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அதிதி பாலன். இவ்வாறு பிரபலமான நமது நடிகை என்ற திரைப்படத்திற்கு பிறகு சுமார் 4 ஆண்டுகள் ஆகியும் திரைப் படத்தில் நடிக்காமல் இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அருவி. இந்த திரைப்படமானது  வித்தியாசமான கதைக்களத்துடன் இருப்பதன் காரணமாக ரசிகர்கள் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு தந்ததது மட்டும் இல்லாமல் விமர்சனமும் கிடைத்தது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரபு புருஷோத்தமன் அவர்கள் தான் இயக்கியிருந்தார் மேலும் இத்திரைப்படம் முழுக்க முழுக்க சமூக அரசியல் சார்ந்த திரைப்படமாக இருப்பதன் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையை இந்த திரைப்படத்தின் மூலம் மிக சிறப்பாக சித்தரித்து இருப்பார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் பெண்களுக்கு தன் வாழ்க்கையில் ஏற்படும் வலி சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளினாள் பாதிக்கப்படும் பெண்களின் நிலையை அந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பது அறிவி திரைப்படத்தின் கதையாகும்.

நடிகை அதிதி பாலன் அருவி திரைப்படத்திற்கு முன்பாகவே தல அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவிற்கு தோழியாக நடித்திருப்பார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரித்விராஜ் நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்த நமது நடிகை அதன் பிறகு நான்கு வருடங்களாக எந்தத் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

athithi balan-1
athithi balan-1

இவ்வாறு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை நான் அறிவு திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் திரை உலகை விட்டு விலகி இருந்ததன் காரணமாக அந்த திரை உலகை பற்றி நான் நன்றாக புரிந்து கொண்டேன் மேலும் சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை கண்டுபிடிக்கவும் சினிமா தொடர்பான விஷயங்களை கற்றுக் கொள்வதற்காகவும் தான் நான் நான்கு வருடங்களாக திரைப் பயணத்தை தவிர்த்தேன்  என கூறி உள்ளார்.