லியோவால் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்.! தளபதி 68ல் 200 கோடி சம்பளம் வாங்குவதற்கான காரணம் இதுதான்..

0
leo-vijay
leo-vijay

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார். மேலும் முன்னணி இயக்குனர்களும் விஜய்யை வைத்து படம் இயக்க வரிசை கட்டி நிற்கும் நிலையில் தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை 7 ஸ்கிரீன் லலித்குமார் தயாரித்து வரும் நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதமேனன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து சுவாரசியமான தகவல்களும் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் தொடர்ந்து விஜயின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானது இது படக்குழுவினர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இதற்கு மேல் ஒரு புகைப்படம் கூட வெளியில் போகக்கூடாது என படக்குழு முடிவெடுத்தனர் எனவே சூட்டிங் ஸ்பாட்டில் மொபைல் யூஸ் பண்ணுவதை தடுத்து நிறுத்தினார்கள்.

பிறகு சென்னை திரும்பிய இவர்கள் இரண்டாம் கட்ட படப்பிடிப்பாக சென்னையில் ஷூட்டிங்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தற்பொழுது வரையிலும் லியோ திரைப்படம் ரூபாய் 400  கோடிக்கு மேல் பிசினஸ் செய்யப்பட்டுள்ளது எனவே விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிகமாக வியாபாரம் செய்யப்பட்ட படமாக லியோ படம் விளங்குகிறது.

இந்நிலையில் லியோ திரைப்படம் 400 கோடி பிசினஸ்சான நிலையில் தளபதி 68 படத்திற்கு விஜய்க்கு ரூபாய் 200 கோடி சம்பளம் தர ஏஜிஎஸ் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.