மும்பை இந்தியன்ஸ் அணியில் “பொல்லார்டு” விளையாட காரணமே இவர்தான் வெளிவரும் உண்மை தகவல்.

0

மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் பதினொரு பெயர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 11 வீரர்களும் மேட்ச் வின்னர் பிளேயர்கள் என்பது குறிப்பிடதக்கது அதனாலதான் மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதும் மிகச் சிறந்த அணியாக பாதிக்கப்படுவதோடு அந்த அணியை வீழ்த்துவது மிக சிரமமாக இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷாந்த் கிஷன், ஹர்டிக் பாண்டியா போன்ற அதிரடி வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே போய் எந்த மாதிரியான சூழ்நிலையிலும் மேட்சை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவராக இருப்பவர் போல்லர்ட்.

சமீபத்திய சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் செய்து காண்பித்தார். இந்த நிலையில் பொல்லர்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்படி வந்தார் என்ற  காரணத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதும் அதிரடி ஆட்டக்காரர்கள் தன் பக்கம் வைத்துக் கொள்ள எப்பொழுதுமே ஆர்வம் காட்டும் அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ முதலில் களம் இறக்கியது.

இவர் சில ஆண்டுகள் அந்த அணியில் பேட்டிங், பந்துவீச்சிலும் ஈடுபட்டு வந்தார் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டிருந்த இவர் திடீரென விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பக்கம் சென்றார் அப்போது உடனடியாக பிராவோ பதிலாக வெஸ்ட் இண்டீஸ் இலிருந்து மாற்று வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி அப்போது யாரை எடுக்கலாம்.

என்று  லாராவிடம் கேட்டபோது உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வரும் பொல்லார்ட்டை எடுங்கள் என மும்பை இந்தியன்ஸ்  அணிக்கு பரிந்துரை செய்துள்ளார் உடனே மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட் இடம் பேசியது.

ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற மற்ற அணிகள் முதலில் பொல்லார்ட் எடுக்க ஏலத்தில் ஈடுபட்டது ஆனால் அதிக தொகை கொடுத்து எப்படியோ போராடி தன் வசப்படுத்தியது மும்பை இந்தியன்ஸ்.

இவர் தொடங்கிய சீசனில் இருந்து தற்போது வரையிலும் அவரை விடாமல் தன் பக்கமே வைத்து வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ் இவ்வாறுதான் அவர் காலடி எடுத்து வைத்தார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் லாரா கூறினார்.