அஜித் சூர்யாவை மக்கள் மதிக்க இதுவா காரணம்.!முழுவிவரம் இதோ!!

விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் இதற்கு முன்பு சில படங்களில் நடித்துள்ளார். வனிதா அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியபொழுது அஜித் மற்றும் சூர்யாவை மக்கள் ஏன் இவ்வளவு மரியாதையுடன் மதிக்கிறார்கள் என்பது குறித்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவுடன் பலர் கலந்து கொண்டனர் அதில் ஒருவரான தர்ஷனை பற்றி ஊடகங்கள் முன்பு பேசியுள்ளார். அது என்னவென்றால் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி- ன் பிரச்சினையாகும். இது குறித்து பேசிய வனிதா அவர்கள் சனம் ஷெட்டி என்னதான் தவறுகள் செய்திருந்தாலும் ஊடகங்கள் முன்பு இதுபோன்று தர்ஷன் தவறாக பேசி இருக்கக் கூடாது.

என தர்ஷனை கடுமையாக விமர்சித்தார். சனம் ஷெட்டி இருக்கும் இடத்தில் நான் இருந்திருந்தால் தர்ஷனை செருப்பால் அடித்திருப்பேன் என ஊடகங்கள் முன்பு கூறியுள்ளார்.

மேலும் அஜித் மற்றும் சூர்யாவை மக்கள் மதிப்பதற்கு காரணம் அவர்கள் தங்கள் மனைவியை மரியாதையாக நடத்துகிறார்கள். இதன் காரணமாகவே அஜித் மற்றும் சூர்யா மீது மக்கள் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள் என வனிதா ஊடகங்கள் முன்புதெரிவித்தார்.

Leave a Comment